1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (15:33 IST)

தேவர் இருந்திருந்தால் பாஜகவை பார்த்து பிரமித்து போயிருப்பார்; பொன்.ராதாகிருஷ்ணன்

தேவர் பெருமகனார் இன்று உயிரோடு இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியைப் பார்த்து பூரித்துப்போயிருப்பார். இப்படி ஒரு ஊழலற்ற சிறந்த ஆட்சியை பார்த்து பிரமித்து போயிருப்பார் என கூறியுள்ளார்.


 

 
முத்துராமலிங்க தேவரின் 110வது ஜெயந்தி விழவை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர் கூறியதாவது:-
 
பசும்பொன் திருமகனார் எந்த லட்சியத்திற்காக வாழ்ந்தாரோ, அவரது லட்சியப்படி வாழ்ந்து அவரை கவுரவப்படுத்த வேண்டும். அதுபோல தற்போதைய மோடி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அவரது சிந்தனை செயல்பாடுகளை தற்போதைய மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது.
 
தேவர் பெருமகனார் இன்று உயிரோடு இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியை பார்த்து பூரித்துப்போயிருப்பார். இப்படி ஒரு ஊழலற்ற ஆட்சியை பார்த்து பிரமித்து போயிருப்பார். அவர் வானிலிருந்து வாழ்த்துவதாக நினைக்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.