திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (11:32 IST)

தலையில்லாத முண்டமாக இருக்கிறது அதிமுக: ராதாரவி பாய்ச்சல்!

தலையில்லாத முண்டமாக இருக்கிறது அதிமுக: ராதாரவி பாய்ச்சல்!

அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் திமுகவுக்கு மாறிய நடிகர் ராதாரவி தற்போது அதிமுக தலையில்லாத முண்டமாக இருக்கிறது என விமர்சித்துள்ளார்.


 
 
சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றிற்காக தருமபுரி வந்திருந்த நடிகர் ராதாரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழக அமைச்சர்களுக்கும் நடிகர் கமலுக்கும் இடையே நிலவி வரும் கருத்து மோதல் குறித்து பேசினார். அதில் நடிகர் கமலுக்கு தான் எப்போதும் துணையாக நிற்பேன் என கூறினார்.
 
மேலும் திமுக வலுவிழந்ததால் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனை பிடித்துக்கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஜெயகுமார் கூறிய கருத்துக்கு திமுக வலுவாக தான் உள்ளது, அமைச்சர் ஜெயகுமார் தான் வலுவில்லாமல் உள்ளார் என கூறினார் ராதாரவி.
 
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லை. அந்த கட்சியில் எத்தனை அணிகள் உள்ளது என்பதே தெரியவில்லை. இரட்டை இலை சின்னத்தை பறிகொடுத்துள்ள அதிமுக தற்போது தலையில்லாத முண்டமாக இருக்கிறது. அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்றார்.