ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்....
சென்னை ஆர்.கே.நகரின் இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, சென்னை இராணி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
| கட்சிகள் | வாக்குகள் | வெற்றி | |
|---|---|---|---|
| டிடிவி தினகரன் (சுயேட்சை) | 89,013 | ||
| மதுசூதனன் (அதிமுக) | 48,306 | ||
| மருதுகணேஷ் (திமுக) | 24, 581 | ||
| கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) | 3,802 | ||
| நோட்டோ | 2,348 | ||
| கரு.நாகராஜன் (பாஜக) | 1,368 | ||
| சுயேட்சைகள் | - |
தற்போது அனைத்து சுற்று எண்ணிக்கையும் முடிவடைந்து விட்டது. இதில், அதிமுக வேட்பாளர் மது சூதனனை விட 40,707 வாக்குகள் பெற்று தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.
