வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (10:31 IST)

விஜயபாஸ்கரின் கல்குவாரியில் புகுந்தது மத்திய பொதுப் பணித்துறை: மீண்டும் அதிரடி ரெய்டு!

விஜயபாஸ்கரின் கல்குவாரியில் புகுந்தது மத்திய பொதுப் பணித்துறை: மீண்டும் அதிரடி ரெய்டு!

கடந்த 7-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.


 
 
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் மத்திய பொதுப் பணித்துறை அதிகாரிகள் 10 பேர் குழு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
 
ஆர்கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் அணி பணப்பட்டுவாடா செய்வதாக உச்சக்கட்ட புகார்கள் வந்துகொண்டிருந்த சமையம் அவரது ஆதரவாளரான அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், கல்லூர்ரி, தொழில் நிறுவனங்கள் உறவினர்கள் வீடு என பல இடங்களில் சோதனை நடத்தியது வருமான வரித்துறை.
 
இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதில் சில ஊடகங்களிலும் கசிந்தன. இந்த ஆவணங்களில் அடிப்படையில் முதல்வர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களும் சிக்கினர். இதனையடுத்து இந்த ஆவணங்களின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணையை ஆரம்பித்தது வருமான வரித்துறை.
 
இந்த சூழ்நிலையில் தற்போது விஜயபாஸ்கருக்கு சொந்தமாக புதுக்கோட்டை திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரியில் மத்திய பொதுப் பணித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே ஆய்வு நடத்தி வருகின்றனர். 10 பேர் கொண்டு குழு இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற செய்தி ஆளும் கட்சி வட்டாரத்திலேயே பரவலாக பேசப்படுகிறது.