நண்பர்களை சந்தித்த நடிகர் விஜய்...வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
உலகளவில் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படத்திற்குப் பின் இப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்துப் பாடல் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் , சஞ்சீவ் உள்ளிட்ட அவரது நண்பர்களை சந்தித்துப் பேசியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது