புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (21:24 IST)

அமமுகவின் கடைசி விக்கெட்டும் காலி! அதிமுகவில் இணைந்தார் புகழேந்தி!

கடந்த சில மாதங்களாகவே தினகரனின் அமமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி அதிமுக மற்றும் திமுகவில் இணைது கொண்டிருந்த நிலையில் தினகரனுக்கு ஆதரவாக இருந்த புகழேந்தியும் தற்போது அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்
 
ஏற்கனவே அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, தங்கத்தமிழ்செல்வன் உள்பட பலர் அதிமுக மற்றும் திமுகவில் இணைந்த நிலையில் சற்று முன்னர் அதிமுக தலைமை அலுவலகம் வந்த புகழேந்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவரது ஆதரவாளர்களும் அதிமுகவினர் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தினகரனின் அமமுகவில் இருந்த குறிப்பிடத்தக்க ஒரே தலைவராக இருந்த புகழேந்தியும் தற்போது அதிமுகவில் இணைந்து விட்டதால் அமமுக கிட்ட தட்ட தனிமரமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அமமுக ஓரளவுக்கு நல்ல வெற்றியை பெற்றுள்ளதால் இன்னும் தினகரன் தன்னம்பிக்கையுடன் கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது