1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2017 (14:25 IST)

ஓபிஎஸ் அணிக்கு திடீரென தாவிய முன்னாள் எம்எல்ஏ!

ஓபிஎஸ் அணிக்கு திடீரென தாவிய முன்னாள் எம்எல்ஏ!

சசிகலா அணியில் இருந்த புதுக்கோட்டை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர் இன்று திடீரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.


 
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இதனையடுத்து சசிகலா அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களை தக்க வைக்க முயற்சித்தார்.
 
இந்த அதிகாரப்போட்டியில் ஓபிஎஸ் அணிக்கு அவரோடு சேர்த்து 12 எம்எல்ஏக்கள் ஆதரவு தான் இருந்தது. இதனையடுத்து 122 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார்.
 
ஆனால் பன்னீர்செல்வம் அணிக்கு எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் தொடர்ந்து ஓபிஎஸ் அணிக்கு சென்றுகொண்டிருந்தனர்.
 
இந்நிலையில் அதிமுக இரு அணிகளும் இணைவதற்கான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில் ஓபிஎஸ் அணிக்கு மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் அந்த அணியில் இருந்தால் தான் நல்லது என பல எம்எல்ஏக்கள் உட்பட பல முன்னாள்கள் நினைக்க தொடங்கிவிட்டனர்.
 
அதன் பிரதிபலிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்த புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர் இன்று ஓபிஎஸ் அணியுடன் சேர்ந்தார். இவரது வருகையின் மூலம் எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தை நடைபெறாவிட்டாலும் ஓபிஎஸ் அணிக்கு மேலும் பலர் அங்கிருந்து வந்து இணைய வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.