1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducherry turn to 0 corona zone

ஒருவருக்கு கூட கொரோனா இல்லை! – மகிழ்ச்சியில் புதுச்சேரி!

Puducherry
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில் புதுச்சேரியில் புதிய பாதிப்புகள் பதிவாகவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இரண்டு அலை பாதிப்புகளுக்கு பிறகு தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.

தினசரி பாதிப்புகள் இன்று 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் புதுச்சேரியில் ஒரு பாதிப்பு கூட புதிதாக பதிவாகவில்லை என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது புதுச்சேரியில் மொத்தமே 24 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ள நிலையில் புதிய பாதிப்புகள் இல்லாதது புதுச்சேரி மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - பின்னணி என்ன?