புதுச்சேரியில் முதல் நாளில் மட்டும் ரூ.3 கோடி, அடுத்தடுத்த நாட்களில் மந்தமான மது விற்பனை
தமிழகத்தை அடுத்து சமீபத்தில் புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறந்த நிலையில் மதுக்கடைகளை திறந்த முதல் நாளில் ரூ.3 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்ததாக கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் நேற்றும் இன்றும் மது விற்பனை மந்தமாக இருந்ததாகவும் ஒரு கோடிக்கும் குறைவாகவே மது விற்பனை நடந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மட்டும் முதல் நாளில் 3 கோடியே 85 லட்சத்து விற்பனையான மதுபானம் நேற்றும் இன்றும் மிகக் குறைந்த அளவே மது விற்பனை நடப்பதாக தெரிகிறது. மதுபானங்களின் விலை அதிகம் என்பதால் பொதுமக்கள் மதுக்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது நேற்றும் இன்றும் பெரும்பாலான கடைகளில் கூட்டம் இல்லை என்றும் மதுப் பிரியர்கள் வருகை மிகவும் குறைவாகவே உள்ளதாக தெரிகிறது
இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள மதுக் கடை உரிமையாளர் ஒருவர் கூறும்போது ’தினம் சராசரியாக எனது கடையில் மூன்று லட்சத்துக்கு மது விற்பனை ஆகும். ஆனால் மீண்டும் மதுக்கடைகள் திறந்த முதல் நாளில் ரூ.4 லட்சத்திற்கு விற்பனையானது. அதன் பின்னர் ஒரு லட்சத்திற்கு கூட விற்பனை ஆகவில்லை என்று கூறினார். மதுவின் விலையை குறைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும் என்றும் அரசு இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்