புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 மே 2020 (17:11 IST)

அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்: முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்களுக்கு மட்டுமன்றி அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் அரசின் பெரும்பான்மையான வருமானம் தடைபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நிதியாக கோடிக்கணக்கில் அரசுக்கு நிதியுதவி வந்து கொண்டிருந்தாலும் கொரோனாவிற்கு அரசு அதிக செலவு என்பதால் இந்த நிதியுதவி போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் அரசு ஊழியர்களின் ஆறு நாள் சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்து அந்த தொகையை கொரோனா தடுப்பு நிதியாக பயன்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அங்குள்ள அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற போது அதிரடியாக சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றி அதனை அமல்படுத்தினார் என்பது குறிப்பிடதக்கது
 
இந்த நிலையில் கேரளாவை அடுத்து தற்போது புதுவையிலும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால் அரசு ஊழியர்கள் தங்களது சம்பளத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியாக உள்ளது
 
கேரளா, புதுவையை அடுத்து தமிழகத்திலும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்கப்படுமா? என்ற அச்சத்தில் அரசு ஊழியர்கள் உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு தமிழக முதல்வரிடம் இருந்து எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது