1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

புதுவையில் இருந்து பெங்களூர், ஐதராபாத் செல்லும் விமானங்கள் ரத்து: என்ன காரணம்?

Flight
பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து புதுவையில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படும் என ஸ்பைஸ்  ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
அயோத்தி மற்றும் லட்சத்தீவுக்கு கூடுதலாக விமானங்கள் இயக்க திட்டமிட்டுள்ளதால் போதிய விமானங்கள் இல்லை என்றும் அதனால் புதுச்சேரியிலிருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளதை அடுத்து ஏராளமானோர் விமான டிக்கெட் அயோத்திக்கு புக் செய்து வருகின்றனர். அதேபோல் மாலத்தீவில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து லட்சத்தீவுக்கு ஏராளமானோர் சுற்றுப்பயணம் செய்யவும் புக்கிங் செய்து வருகின்றனர் 
 
எனவே லட்சத்தீவு மற்றும் அயோத்திக்கு கூடுதல் விமானங்கள் தேவைப்படுவதால் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு செல்லும் விமானங்கள் பிப்ரவரி 1 முதல் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva