1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (14:21 IST)

ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் புதுவையிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
 புதுச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் அது வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதைக்க வேண்டும் என்றும் கொண்டாட்டம் எல்லாவற்றைக்கும் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு இல்லாமல் நடக்கும் கொண்டாட்டங்கள் திண்டாட்டங்களாக மாறிவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

 
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து ஏற்கனவே நடிகர் ரஞ்சித் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் சமூக ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.
 
Edited by Siva