வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (17:59 IST)

ஆன்லைன் செமஸ்டர் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - அண்ணா பல்கலை

ஆன்லைன் செமஸ்டர் தேர்வு வழிகாட்டு  நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் கெளியிட்டுள்ளது.

அதில், புத்தகத்தைப் பார்த்து மாணவர்கள் எழுதும்  take home  முறையில் செமஸ்டர் தேர்வு எனவும், இத்தேர்வை செல்போன், லேப்டாப், உள்ளிட்ட முன்னணு சாதனங்களில் எழுதலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், தேர்வுக்கான வினாத்தாள்  கூகுள் கிளாஸ் ரூம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். விடைத்தாளில் ஒவ்வொரு பக்கத்தின் மேல் பதிவு என்ம் பெட்யர், பாட குறியீடு, பாடப் பெயர் போன்றவற்றை மாணவர்கள் குறிப்பிட வேண்டும்.

அரியர் மாணவர்கள் இறுதியாகப் பயின்ற கல்லூரிகளில் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்…அடைக்கப்பட்ட கல்லூரிகளில் படித்த மாணவர்கள் அரியல் தேர்வு எழுத விரும்பினால் வேறொரு கல்லூரி பொறுப்புக் கல்லூரியாக அவர்களுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.