வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 மே 2022 (11:25 IST)

Public Exam Paper correction - ஜூன் 1 ஆம் தேதி முதல் துவங்கலாம்!

Public Exam Paper correction - ஜூன் 1 ஆம் தேதி முதல் துவங்கலாம்!
தேர்வு முடிந்தவுடன் ஜூன் 1 ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 
தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டு என பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் திருத்தம், பெயர் விடுபட்டிருந்தால் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கலாம் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர்.
Public Exam Paper correction - ஜூன் 1 ஆம் தேதி முதல் துவங்கலாம்!
+12 மாணவர்களுக்கு இன்னும் 3 தேர்வுகள் மட்டுமே நடைபெற வேண்டும், இதேபோல 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்னும் 4 தேர்வுகள் எழுத வேண்டும். இந்த மாதம் 31 ஆம் தேதியுடன் தேர்வுகள் முழுமையாக முடிந்து விடுகின்றன. 
 
இதனிடையே நடந்த தேர்வு விடைத்தாள்கள் இடமாற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ள நிலையில் தேர்வு முடிந்தவுடன் ஜூன் 1 ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எத்தனை மையங்களில் விடைத்தாள் திருத்தப்படும், எத்தனை ஆசிரியர்கள் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற விவரம் விரைவில் தெரிவிக்கப்படும் என தகவல்.