வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2019 (18:51 IST)

தொடரும் பைக்ரேஸினால் பொதுமக்கள் அச்சம் .. வைரல் வீடியோ

கரூர் நகரின் மையப்பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீச்சரிவாளில் கேக் வெட்டிய ரெளடிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, தற்போது, கரூர் புறவழிச்சாலையான திருச்சி பைபாஸ் ரோட்டில் பைக்கில் சாகசத்தில் ஈடுபடுவது தற்போது பிரபலமாகி வருகின்றது. 
இந்நிலையில், ஏற்கனவே சென்னை மற்றும் கோவையில் தான் பைக்ரேஸ் மற்றும் பைக்ரேஸினால் செல்பி ஆகியவைகளினால் பெரும் விபத்து ஏற்பட்ட நிலையில், ஆங்காங்கே அதி வேக பைக் ரேஸ்கள் காவல்துறையினரினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது கரூர் புறவழிச்சாலையான திருச்சி பைபாஸ் ரோட்டில் பைக்ரேஸ் என்னும் பெயரில் தற்போது வீரர்கள் சாகசம் என்கின்ற பெயரில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் மட்டுமில்லாமல், கார் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளும் தற்போது அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 
 
மேலும், புறவழிச்சாலையில், அதுவும் NHAI கட்டுப்பாட்டின் கீழ், உள்ள டோல்கேட்டின் மூலம் வாகனங்கள் தங்கு தடையில்லாமல் எளிய முறையில் போக்குவரத்தில் ஈடுபடும் வண்ணம் உருவாக்கிய பைபாஸ் சாலையிலேயே இது போல சாகசம் என்கின்ற பெயரில் வீரர்கள் அதுவும் பைக்கில் படுத்துக் கொண்டு ஓட்டுவது, அதிகவேக சப்தத்துடன் கூடிய விரைவு ரேஸ் இவைகளினால் இப்பகுதியின் வழியாக அதாவது கரூர் வழியாக திருச்சி செல்லும் பயணிகள், மற்றும் திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவை, திருப்பூர், ஈரோடு, தாராபுரம் ஆகிய வழிகளில் செல்லும் பயணிகளும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 
 
ஆகவே, தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சி.சி.டி.வி கேமிரா மற்றும் கண்காணிப்பு மையங்களை ஏற்படுத்தி அந்த சாகச வீரர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்ட காவல்துறையினர் விரைந்து செயல்பட வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.