1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 மே 2021 (09:50 IST)

ரெம்டெசிவிர் கிடையாது... தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

நேரு விளையாட்டரங்கில் ரெம்டெசிவிர் வாங்க காத்திருந்தவர்கள் இரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 
சென்னை நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டதாகவும் எனவே ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு யாரும் நேரு ஸ்டேடியத்தில் வரவேண்டாம் என்றும் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது. 
 
கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் நேரு ஸ்டேடியத்தில் வரிசையில் காத்திருந்தனர். இதனால் தனிமனித இடைவெளி இன்றி காத்திருக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுபவருக்கு நேரடியாக தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் அனுப்பப்படும் என நேற்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், நேற்றிரவு முதலே ஏராளமானோர் மருந்து வாங்க நேரு விளையாட்டு அரங்கு முன்பு காத்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு மருந்து வழங்கவேண்டும் என வலியுறுத்தினர். காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துசெல்ல அறிவுறுத்திய நிலையில், நள்ளிரவில் தர்ணாவில் ஈடுபட்டனர்.