நாம் தமிழர் கட்சியின் பிரபல பெண் தலைவர் கட்சி மாறுகிறாரா? ரகசிய பேச்சு என தகவல்..!
கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அவ்வப்போது கட்சியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், பிரபல பெண் தலைவர் ஒருவர் கட்சியிலிருந்து வெளியேற போவதாகவும், அவர் திராவிட கட்சி ஒன்றில் இணைய இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து பல மாவட்ட நிர்வாகிகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர் என்பதும், சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் வெளியேறி, சீமான் குறித்து பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவர் சீமான் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. திராவிட கட்சிகளில் ஒன்றில் அவர் சேர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், தனக்குரிய மரியாதை, தான் கேட்கும் தொகுதி ஆகியவற்றை வழங்கினால், கட்சியில் சேர சம்மதம் என்று கூறியிருப்பதாகவும், அதற்கு அந்த திராவிட கட்சியும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே, அந்த பெண் தலைவர் விரைவில் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி, குறிப்பிட்ட திராவிட கட்சியில் இணைவார் என்று கூறப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், பாஜகவின் சீனியர் தலைவர் ஒருவரும் அதே திராவிட கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
Edited by Siva