1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (09:10 IST)

சினேகா, பிரசன்னா ஜோடி பிரிகிறதா?: மோதலுக்கு காரணம் அந்த நடிகரா?

சினேகா, பிரசன்னா ஜோடி பிரிகிறதா?: மோதலுக்கு காரணம் அந்த நடிகரா?

நடிகர் பிரசன்னா நடிகை சினேகாவை காதல் திருமணம் செய்து கொண்டனர். குழந்தை, குடும்பம் என சிக்கல் இல்லாமல் சில ஆண்டுகளை நிம்மதியாக கடந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில் தற்போது விரிசல் ஏற்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணையத்தில் வருகிறது.


 
 
நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் திருமணம் ஆனதில் இருந்து கிடைக்கிற விளம்பரங்கள் பட வாய்ப்புகள் என தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கணவர் பிரசன்னாவுக்கு சொந்தமாக படம் தயாரித்து அதில் நடிக்க ஆசை இருந்ததாக கூறப்படுகிறது.
 
நல்ல நடிகராக இருந்தாலும் அவரால் சினிமாவில் வெற்றி பெற்ற நடிகராக முடியவில்லை. இதனை நிறைவேற்றவே படம் தயாரித்து நடிக்க விரும்பியுள்ளார் பிரச்சன்னா. கணவரின் இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என மனைவி சினேகாவும் விரும்பியுள்ளார்.
 
படம் தயாரிக்க ஆரம்பித்து பெரிய நிறுவனங்களே கடனில் தத்தளித்து வாழ்க்கையை இழந்த கதைகளை பார்த்திருக்கிறோம். இதை தான் சினேகாவின் நெருங்கிய தோழி ஒருவர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். இத்தனை நாள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்துவிட வேண்டாம் என தோழி கூற சினேகா உஷாராகி விட்டதால் கணவருக்கு கோபமும், இருவருக்கும் பிரச்சனையும் வர காரணம் என கூறப்படுகிறது.
 
இன்னொரு பக்கம் சினேகா படம் தயாரிப்பு குறித்து அந்த ராசியான ஒல்லி நடிகரை போய் பார்த்ததாகவும் அந்த பிரச்சனை காரணமாக சினேகா, பிரசன்னா இடையே மோதல் ஏற்படதாகவும் செய்திகள் உலா வருகிறது.