1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 5 மார்ச் 2021 (14:26 IST)

12ம் வகுப்பு வரை இலவச கல்வி! – பாமகவின் தேர்தல் அறிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் பாமக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. கூட்டணி உறுதியான நிலையில் தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி. தனியார் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி, நீர் மேலாண்மை, மது ஒழிப்பு, சமூக நீதி, நிர்வாக சீர்திருத்தம் போன்றவை குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.