வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 ஜூன் 2023 (07:31 IST)

தமிழக சிறைவாசிகளுக்கு சிக்கன் கிரேவி, அவித்த முட்டை: மெனுவில் மாற்றம்..!

தமிழக சிறைவாசிகளுக்கு உணவில் மெனு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுவரை தமிழக சிறைவாசிகளுக்கு நாள் ஒன்றுக்கு 96 ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 135 ரூபாயாக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள சிறைவாசிகளுக்கு புதிய மெனுவின்படி காலையில் பொங்கல் அவித்த முட்டை, மதியம் சிக்கன் கிரேவி, மாலையில் சூடான சுண்டல் மற்றும் இரவில் சப்பாத்தி சென்னா ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே பல ஆண்டுகளாக தமிழக சிறைவாசிகளுக்கான புதிய மெனு தயாரிக்கும் தயாரிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது அது அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva