வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 7 ஜூன் 2021 (15:53 IST)

5 மணிக்கு பிரதமர் மோடி உரை....இணையதளத்தில் டிரெண்டிங்

பிரதமர் இன்று மாலை 5 மணிக்கு மக்களுக்கு உரையாற்ற உள்ள நிலையில் இதுகுறித்த இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சமீப நாட்களாக இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து 1 லட்சமாக உள்ளது. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்று பாதிப்பும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதைத்தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தடுப்பு மருந்துகளையும் மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.  இதனால், மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாள் கழித்து பிரதமர் மக்களுக்கு உரையாற்ற உள்ளதால், கொரொனா பாதிப்புகள் குறைந்துவருவது குறித்தும் மக்கள் அவசியம் தடுப்பு மருத்துகள் போடவேண்டும் என்பது குறித்து அறிவுறுத்துவார் எனவும். கருப்பு, வெள்ளை, மஞ்சல் பூஞ்சை தொற்றுகளுக்கு மருத்துகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றைக் குறித்துப் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.