1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (10:55 IST)

பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் மோடி என்ன சொன்னாரு தெரியுமா?

பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் மோடி கூறிய விஷயங்கள்:


 


1. பாகிஸ்தான் மக்கள், உங்களின் ஆட்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட வேண்டும்.
 
2.ஒரு வகையில் இதுவும் உங்களின் தாய் நாடுதான். ஏனெனில் உங்கள் பாட்டன், முப்பாட்டன்கள் வாழ்ந்த பூமி இதுதான் என்பதை நீங்கள் உணரவேண்டும்.
 
3.பாகிஸ்தான் தலைவர்கள் காஷ்மீரை பேசி உங்களை திசை திருப்புகிறார்கள். இரு நாடுகளும் ஒரே காலகட்டத்தில்தான் சுதந்திரம் பெற்றன. இந்தியா மென்பொருள்களை ஏற்றுமதி செய்துவரும் வேளையில், பாகிஸ்தான் ஏன் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது என்று நீங்கள் உங்கள் ஆட்சியாளர்களை கேளுங்கள்.
 
4.வாருங்கள். இருநாடுகளும் ஒன்றிணைந்து ஏழ்மை,வேலையில்லா திண்டாட்டம், கல்வியறிவின்மை இவைகளுக்கு எதிராக போராடுவோம். இதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.
 
5.தற்போது ஆட்சியில் இருக்கும் அண்டை நாட்டு ஆட்சியாளர்கள் பாகிஸ்தானின் தீவிரவாதம் குறித்து கவனித்து வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
 
6.உங்களால் ஆக்ரமிப்பு காஷ்மீரை கட்டுப்படுத்தி நிர்வாகம் செய்ய முடியவில்லை. உங்களுக்கு பலுச்சிஸ்தான் உள்ளது. அதை ஒழுங்காக நிர்வாகம் செய்யாமல் காஷ்மீரை தேடி வருகிறீர்கள். இது எப்படி நியாயமாக படுகிறது? இந்த வினாக்கள் எல்லாம் பாகிஸ்தான் மக்கள் உங்கள் ஆட்சியாளர்களிடம் கேட்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பாகிஸ்தான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.