1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (08:59 IST)

சிறப்பு ரயிலில் சொந்த ஊர் செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சிறப்பு ரயிலில் செல்ல இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் குடியரசு தலைவர் ஆன பின் முதல் முறையாக சிறப்பு ரயிலில் இன்று சொந்த கிராமத்துக்கு செல்கிறார். சிறப்பு ரயில் மூலம் டெல்லியிலிருந்து கான்பூர் சென்று அங்கிருந்து அவர் தனது சொந்த கிராமத்தில் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஜனாதிபதி சிறப்பு ரயிலில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் குடியரசுத் தலைவர் ஒருவர் பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஜனாதிபதி சிறப்பு ரயிலில் கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பயணம் செய்த இந்த அரும் அதன் பின்னர் 15 ஆண்டுகள் கழித்து இன்று தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று ஜனாதிபதிக்கான சிறப்பு ரயிலில் பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது