1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2024 (15:25 IST)

மருந்து சீட்டில் CAPITAL எழுத்தில்தான் எழுத வேண்டும்.! மருத்துவர்களுக்கு பறந்த உத்தரவு.!!

doctors
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மருத்துவர்கள் மருந்து சீட்டில் CAPITAL எழுத்தில்தான் எழுத வேண்டுமென்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
 
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மருந்து சீட்டில் தெளிவாகவும், CAPITAL எழுத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மருத்துவ சீட்டில் CAPITAL எழுத்தில்தான் எழுத வேண்டுமென்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

 
மருந்து சீட்டில் CAPITAL எழுத்துக்களில் இருக்க வேண்டும் எனவும் அந்தந்த மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியிருந்த நிலையில், மேற்கண்ட உத்தரவை தமிழக சுகாதாரத்துறை பிறப்பித்துள்ளது.