1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜூன் 2024 (14:43 IST)

வெற்றி, தோல்வி சகஜம்.. வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம்: பிரேமலதா

கோப்புப் படம்
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும், தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம், கடைசி வரை வீரமாக போராடி சரித்திரம் படைத்துள்ளோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
 
தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றி கனியை பறிக்க கடுமையாக உழைப்போம் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க பெரிய வெற்றியை பெற வேண்டும் என்றும், தே.மு.தி.கவுக்கு வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
 
பல சவால்களை எதிர்த்து, அசைக்க முடியாத சக்தியாக இந்த கூட்டணியை மாற்றிய தொண்டர்களுக்கு நன்றி என்றும் பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார்.
 
விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா மகன் விஜய பிரபாகரன் ஐயாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை எல்லாம் தோல்வி அடைந்தார் என்பதும் அவர் கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பை அடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இன்னும் கொஞ்சம் தீவிரமாக அவர் பிரச்சாரம் செய்திருந்தால் வெற்றிக் கனியை படுத்திருப்பார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran