வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2024 (15:43 IST)

அதிமுக தொண்டர்களுக்கு நன்றி: பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

dmdk premalatha
மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து வேட்பாளர்கள் வெற்றிபெற மனதார எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து கூட்டணி வேட்பாளர்களுக்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

கூட்டணி தர்மத்தோடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இறங்கி உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கும் களப்பணி ஆற்றிய கழக வீரர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்

ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறோம் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில் மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்

இவ்வாறு பிரேமலதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran