திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: வியாழன், 30 மார்ச் 2017 (13:54 IST)

விஜயகாந்துக்கு என்ன ஆச்சு?: பிரேமலதா விளக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 22ம் தேதி நள்ளிரவு மியாட் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காகவே  அனுமதிக்கப்பட்டதாக அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டது.


 

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், விஜயகாந்த் நலமாக உள்ளார். விரைவில் அவர் ஆர்.கே, நகர் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள உள்ளார். தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்று கூறினார்.