1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 மே 2023 (10:59 IST)

கோடைகாலம் என்பதால் முதல்வர் சிங்கப்பூர் சுற்றுலா சென்றுள்ளார்: பிரேமலதா

கோடை காலம் என்பதால் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக கிளம்பினார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று அவர் சிங்கப்பூரில் தொழில் அதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார் என்றும் தமிழகத்தில் முதலீடு செய்ய அவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் முதல்வரின் பயணம் குறித்து கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ’முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு முன் துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று வந்த பிறகு இதுவரை என்ன தொழில் தொடங்கப்பட்டது? எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.
 
முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை நான் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அவர் குடும்பத்துடன் கோடை சுற்றுலாவுக்காக சென்று உள்ளார் என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran