செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (08:04 IST)

விஜயகாந்த் உருவத்தை டாட்டூ போட்டு கொண்ட பிரேமலதா.. வைரல் புகைப்படம்..!

தேமுதிக தலைவர் தலைவராக இருந்த விஜயகாந்த் சமீபத்தில் காலமான நிலையில் அவரது உருவத்தை தனது வலது கையில் டாட்டூவாக பிரேமலதா வரைந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம்  இணையத்தில் வைரல் ஆகி வருகிறது  

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் காலமான நிலையில் அவரது நினைவிடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளராக இருக்கும் பிரேமலதா தற்போது கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் உள்ளார்.

இந்த நிலையில் விஜயகாந்தை நெஞ்சில் வைத்திருக்கும் பிரேமலதா தற்போது அவரது சிரித்த முகத்தை தனது கையில் காட்டுவாக வரைந்து உள்ளார். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படத்தை தேமுதிக தோழர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் உருவத்தை வைத்து தான் வாக்குகள் கேட்க வேண்டிய நிலையில் இருப்பதால்  அவரது உருவத்தை விரைவில் வரைந்து கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Edited by Siva