தேமுதிக தலைவர் ஆகிறாரா பிரேமலதா? தொண்டர்கள் உற்சாகம்!
தேமுதிக பொருளாளராக பதவி வகித்து வரும் பிரேமலதா விரைவில் தேமுதிக தலைவராக இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தேமுதிக தலைவர் பதவியில் தற்போது இருக்கும் விஜயகாந்த் உடல்நலக்குறைவாக இருப்பதால் தலைவர் பதவியை பிரேமலதா ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது
இருப்பினும் இது குறித்து தேமுதிக தொண்டர்கள் ஒரு சிலர் கூறியபோதும் தேமுதிகவின் நிரந்தர தலைவர் விஜயகாந்த் தான் என்றும், பிரேமலதா செயல் தலைவராக பொறுப்பு ஏற்பார் என்றும் கூறப்படுகிறது
எனவே இன்னும் ஓரிரு நாளில் தேமுதிக தலைவர் அல்லது செயல் தலைவர் பதவியை பிரேமலதா ஏற்பார் என்றும் கூட்டணி உள்பட பல முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்