திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜூன் 2024 (18:22 IST)

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திட்டக்குடியில் இருந்து கொத்தனூர் வழியாக அரசு பேருந்தில் பயணித்த  கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி வந்ததை அடுத்து அந்த பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்துகள், ரயில்கள் விமானங்கள், ஆகியவற்றில் பயணம் செய்யும் கர்ப்பிணி பெண்களுக்கு பயணத்தின் போது குழந்தை பிறந்ததாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் திட்டக்குடி என்ற பகுதியிலிருந்து கொத்தனூர் வழியாக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில் அதில் நிறைமாத கர்ப்பிணி பயணம் செய்தார். இந்த நிலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போதே திடீரென கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி வந்ததை எடுத்து அவர் வலியால் துடித்தார்.

 உடனே பேருந்தை ஓட்டுநர் சாலை ஓரமாக நிறுத்திய நிலையில் அந்த பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர் தான் பிரசவம் பார்ப்பதாக கூறினார். அவருக்கு அந்த பேருந்தில் பயணம் செய்த சில பெண்களும் உதவியாக இருந்தனர். இதனை அடுத்து பேருந்தில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்ததாகவும் அழகான ஆண் குழந்தை பிறந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பேருந்தில் திடீரென பிரசவ வலி ஏற்பட்ட போது சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கும், பிரசவம் பார்த்த மூதாட்டிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Edited by Mahendran