திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (12:05 IST)

வெளி மாநில பதிவெண் விவகாரம்: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் முக்கிய கோரிக்கை..!

வெளி மாநில  பதிவெண் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் தமிழ்நாடு மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

வெளி மாநிலத்தில் பதிவெண் கொண்ட பேருந்துகள் தமிழகத்தில் அதிகமாக இயங்குகிறது என்று புகார் வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் ஒரு முக்கிய கோரிக்கையை அரசுக்கு வைத்துள்ளது.

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடையை மீறி இயக்க திட்டமில்லை என்றும், தமிழகத்தில் மறு பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஒரு பேருந்தை பதிவு செய்வதற்கே ஒரு மாதம் கால அவகாசம் எடுப்பதால், சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என்றும், விரைவாக மறுபதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Edited by Siva