ஸ்டாலின் வாழ்க! கோஷம் போட்ட தொண்டருக்கு அழகிரி கும்மாங் குத்து!
அழகிரி தலைமையில் இன்று நடைபெற்ற பேரணி தொடர்பான ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அறிவித்த படி இன்று காலை சென்னை சேப்பாக்கம் பகுதியில் இருந்து மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் வர அழகிரி தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினார். ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டதாக அழகிரி கூறினார். ஆனால், மிகவும் சொற்பமான எண்ணிக்கையிலேயே ஆதரவாளர்கள் பேரணியில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த பேரணி தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், நடந்து செல்லும் அழகிரி திடீரென தனக்கு பின்னால் கோஷம் போடும் ஒரு தொண்டரை தாக்க முயலுகிறார். அதன்பின் நிலைமை சரியாகிறது. பார்ப்பதற்கு, தன் மீது மோதுவது போல் நடந்த தொண்டரை அழகிரி தாக்குவது போல் தெரிகிறது.
ஆனால், ஸ்டாலின் ஒழிக! என சொல்வதற்கு பதில் வாழ்க என அந்த தொண்டர் கோஷம் போட்டார். எனவே, அதனால் கோபமடைந்து அழகிரி அவரை தாக்க முயன்றார் என சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையில் எதற்காக கோபப்பட்டார் என்பதே அவருக்கே வெளிச்சம்!