பரந்தூர் விமான நிலைய விவகாரம்: தேர்தலை புறக்கணிக்க ஏகனாபுரம் மக்கள் முடிவு
சென்னை அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த திட்டத்தை கைவிட கோரி அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பரந்தூரில் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறி ஏகனாபுரம் என்ற கிராமத்து மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
பரந்தூர் புதிய விமான நிலையத்திற்காக அந்த பகுதியில் உள்ள 13 கிராமங்களில் இருந்து சுமார் 5000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பல ஏக்கர் நிலங்கள் விளை நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து 13 கிராம மக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அதேபோல் மற்ற கிராமங்களிலும் தேர்தலை புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva