வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (17:15 IST)

மக்களுக்கு வந்த கடிதங்களை வைக்கோல்போரில் பதுக்கிய தபால்காரர்

பொதுமக்களுக்கு வந்த கடிதங்களை அவரிடம் கொடுக்கமால், வைக்கோல் போரில் பதுக்கு வைந்திருந்த தபால்காரர் பற்றி செய்தி வெளியாகியிருக்கிறது.


 

 
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள ஒரு ஊர்தான் பலபட்டி. அங்குள்ள தபால் நிலையத்தில், அசோக் என்பவர் தபால்காரராக பணிபுரிந்து வருகிறார். அந்த ஊரைச் சுற்றியிருக்கும் 15 கிராமத்தை சேர்ந்த மக்கள், இந்த தபால் நிலையத்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
 
கடந்த ஐந்து மாதங்களாக தங்களுக்கு எந்த தபாலும் கிடைக்கவில்லை என்று அந்த கிராம மக்கள், மணப்பாறையில் உள்ள மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அவர்கள் வந்து சோதனை செய்த போது, தபால் நிலையத்திற்கு அருகில் இருந்த வைக்கோல் போரில் கட்டு கட்டாக தபால்களை, அசோக் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
 
மேலும், அசோக் பொதுமக்களின் சிறுசேமிப்பு, ஆர்.டி ஆகியவற்றில் மோசடி செய்திருப்பதும், அவர்களுக்கு வந்த கடிதங்களை கொடுக்காமல் வைக்கோல் போரில் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
 
இந்நிலையில் போஸ்ட் மேன் அசோக் தலைமறைவாகி விட்டார். அவரை மேலதிகாரிகள் தேடி வருகின்றனர்.