நல்லவர் பின்னரே இனி நாடே வரும் தன்னாலே... அரசியலுக்கே வரா ரஜினிக்கு போஸ்டர்!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (14:12 IST)
ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கும் விதத்தில் நல்லவர் பின்னரே இனி நாடே வரும் தன்னாலே என மதுரையில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
 
 
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு தான் அரசியலுக்கு வருவது நிச்சயம் எனவும் அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்ப இல்லனா இன எப்பவும் இல்லை என கூறி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தினா். 
 
கொரோனா தொற்று காரணமாக தனது அரசியல் பயண தொடக்கத்தை சிறிது மாதம் தள்ளிப்போட்டுள்ள ரஜினிகாந்த் அக்டோபர் மாதத்தில் இருந்து மதுரையிலிருந்து தொடங்கி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை வீடியோ கான்பிரசிங் முறையில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதனிடையே மதுரையில் உள்ள ரஜினி ரசிகர்கள் அவரது அரசியல் வருகையை வரவேற்கும் விதமாக பல்வேறு சுவரொட்டிகளை ஓட்டிவருகின்றனர். அதன்படி கடந்த வாரம் பணம், பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் திராவிட கட்சிகள் வேண்டாம், ஆன்மீக அரசியலுக்கு தயாராகுங்கள் என ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதையடுத்து ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கும் விதத்தில் நல்லவர் பின்னரே இனி நாடே வரும் தன்னாலே என்ற வாசகத்தோடு ரஜினி ரசிகர் மக்கள் மன்ற இளைஞரணி செயலாளர் பாலசந்தர் அடித்த போஸ்டர்  மதுரை முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
 
ஆன்மீக அரசியல் புதிய அஸ்திவாரத்தை தொடங்கும் சூப்பர்ஸ்டாரின் அரசியல் கனவு நிறைவேறுமா என ரசிகர்களும் தினசரி எதிர்பார்ப்போடு காத்துகிடக்கின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :