திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூன் 2018 (19:18 IST)

ஸ்கூல் பையன் போல் சட்டசபையை கட் அடிக்கும் ஸ்டாலின்: பொன்னார் கிண்டல்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இருந்து திமுக எப்போதும் வெளிநடப்பு செய்வது பலரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது. 
 
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, திமுக அழிந்துவிடும் என்பது திமுகவிற்கே தெரிகிறது. பள்ளி மானவ்ர்கல் வகுப்புகளை கட் அடிப்பது போல திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சட்டசபையை கட் அடித்து வருகிறார். 
 
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டது. ஆனால், கார்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசோ இன்னும் உறுப்பினர் பட்டியலை கூட தயார் செய்யவில்லை என பேசியுள்ளார்.