1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2018 (14:58 IST)

கமல் செய்த காரியம் தமிழகத்துக்கும், திராவிடத்துக்கும் பெருத்த அவமானம்; பொன்.ராதாகிருஷ்ணன் வருத்தம்

தமிழ் பற்றியும் தமிழகத்தை பற்றியும் ஒன்றும் தெரியாத கெஜ்ரிவாலை வைத்து கமல்ஹாசன் கட்சி தொடங்கியது தமிழகத்துக்கு பெருத்த அவமானம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 
விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மத்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
 
தமிழ்நாட்டை பற்றி சிந்தனை இல்லாதவரை வைத்து கமல்ஹாசன் கட்சியை தொடங்கி இருக்கிறார். தமிழ் பற்றியும், தமிழகத்தை பற்றியும் ஒன்றும் தெரியாத டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை வைத்து கமல்ஹாசன் கட்சி தொடங்கி இருப்பது திராவிடத்துக்கும், தமிழகத்தும் பெருத்த அவமானம். 
 
தமிழ் பற்றியும், தமிழர்களை பற்றியும் பெருமையாக பேசியவர் பிரதமர் மோடி என்று கூறியுள்ளார்.