திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 மார்ச் 2018 (08:44 IST)

கர்ப்பிணி பெண் மரணம் கொடுஞ்செயல்: பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் மீது காவல்துறை ஆய்வாளர் காமராஜ் நடத்திய தாக்குதலால் அப்பாவி கர்ப்பிணி பெண் உஷா பலியானார்.

இந்த நிலையில் கர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணமான ஆய்வாளர் காமராஜ் நேற்றிரவே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டார். மேலும் துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜூக்கு வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியபோது இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் மீது கடுமையாக நடந்து கொண்டதன் விளைவாக அப்பாவி கர்ப்பிணி பெண் இறப்பு மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்த கொடும் செயலுக்கு காரணமான அதிகாரி மீது தமிழக அரசு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து திருவெறும்பூர் எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: திருவெறும்பூரில் காவல்துறையினர் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. கழக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவையேற்று டி.ஜி.பியிடம் பேசி சம்பந்தபட்டவரை உடனடியாக கைது செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளேன். அவரும் உறுதியளித்துள்ளார் என்று கூறியுள்ளார்.