திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 7 ஏப்ரல் 2018 (13:13 IST)

இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின்: பொன் ராதாகிருஷ்ணன்

ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கடையடைப்பு போராட்டம், சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று திருச்சி முக்கொம்பில் காவிரி உரிமை மீட்பு நடை பயணம் தொடங்கினார்.
 
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது;- 
 
”தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடகாவை நோக்கி ஸ்டாலின் நடை பயணம் சென்றிருந்தால் அவருக்கு நான் பாராட்டு தெரிவித்திருப்பேன். காவிரிக்காக அல்லாமல் அரசியலுக்காக இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின். திமுகவின் போராட்டம் தமிழர்களுக்காகவா? கர்நாடக காங்கிரஸ்காகவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.