வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2019 (14:12 IST)

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : ’5 வது ’குற்றவாளி கைது

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வழக்கில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக ஏற்கனவே திருநாவுக்கரவு செந்தில், வசந்தராஜா, சபரிராஜ் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்து சிறையில் அடைத்து விசாரித்துவந்த நிலையில் தற்போது மணிவண்ணன் என்பவரை கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த மணிவண்ணனை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.  வரும் வெள்ளிக்கிழமை வரை மணிவண்ணனை காவலில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளதாக சிபிசிஐடி போலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மணிவண்ணன் மீது பாலியல் புகாரும் சேர்க்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.