வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (08:11 IST)

படிகட்டில் தவறி விழுந்த நடிகை!!! கபாலென்று காப்பாற்றிய பிரபலம்...

படிகட்டில் இருந்து தவறி விழப்பார்த்த பிரியங்காவை அவரது கணவர் நிக் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது
36 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட  10 வயது குறைந்த அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர்  நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் வெகுவிமரிசையாக நடந்தது.
 
சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என செய்திகள் வெளியானது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்தார் பிரியங்கா. அதை நிரூபிக்கும் வகையாக இருவரும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நிக்குடன் திரும்பிய பிரியங்கா, படிகட்டில் இருந்து தவறி விழ பார்த்தார். ஆனால் நிக் உடனடியாக பிரியங்காவை தாங்கி பிடித்து விட்டார். இந்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Her reaction