திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (14:32 IST)

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஏன்? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் சந்தித்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து அவர்  விளக்கம் அளித்துள்ளார்.
 
இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது என்றும், தென்னை விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான மனுவை அமைச்சரிடம் அளித்தோம் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்,.
 
 மத்தியில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறுவதாகவும் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்றும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மத்திய அமைச்சரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகி விடுவாரோ என்ற பரபரப்பு தமிழக அரசியல்  வட்டாரத்தில் ஏற்பட்டு உள்ளது.
 
Edited by Mahendran