செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (08:42 IST)

பொள்ளாச்சியில் குழந்தை கடத்தல்; 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்!

பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கேரளாவில் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்த யூனிஸ் – திவ்யபாரதி தம்பதிக்கு அங்குள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 29ம் தேதி குழந்தை பிறந்தது. தாயும், சேயும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று காலை குழந்தை காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குழந்தை கடத்தல்க்காரர்களை தேடிய போலீஸார் கேரள மாநிலம் பாலக்காட்டில் குழந்தையை கடத்தியவர்களை கைது செய்துள்ளதுடன், குழந்தையையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.