திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 நவம்பர் 2022 (19:51 IST)

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது – எடப்பாடி பழனிசாமி

edapadi palanisamy
தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், தற்போது போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ் நாட்டில் உளவுத்துறை செயலிழந்து உள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாகக் கையாளவில்லை என்றும்,  கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கை காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் டன் கணக்கில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன, போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj