வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2021 (15:48 IST)

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் மரணம் – தொண்டர்கள் அதிர்ச்சி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான ஞானதேசிகன் உயிரிழந்துள்ளார்.

2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் ஞானதேசிகன். பின்னர் இவர் தமிழ் மாநில காங்கிரஸுக்கு சென்றார். அங்கு அவருக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ஞானதேசிகன் சென்னை அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி காலாமானார். இந்த செய்தி தமாகா தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இருமுறை எம் பி யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.