1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (14:13 IST)

தமிழகத்திற்கு பாஜக துரோகம்: டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்

தமிழகத்திற்கு பாஜக துரோகம் செய்கிறது என்பதை குறிக்கும் வகையில் #BJPBetrayingTNPeople  என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் திடீரென டிரெஅண்ட் ஆகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதால் பல இடங்களில் முதல் தவணை தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மக்கள் பல மணிநேரம் காத்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தடுப்பூசிகள் இன்னும் தரப்படவில்லை என்றும் தமிழ்நாடு சுகாதாரத் துறையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழகத்திற்கு தடுப்பூசியை கொடுக்காமல் தமிழகத்தை விட குறைவாக உள்ள மக்கள் தொகை உள்ள மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கி உள்ளதை கண்டித்தே #BJPBetrayingTNPeople என்ற ஹேஷ்டேக் டிரண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட குஜராத்துக்கு தமிழகத்தை விட பல மடங்கு அதிகமாக தடுப்பூசிகள் ஒதுக்கி உள்ளதை கண்டித்தும் இந்த ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்