1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 30 ஜூலை 2014 (12:00 IST)

சப்-இன்ஸ்பெக்டர் மகனைக் கடத்தியது உட்பட 52 வழக்குகளில் சிக்கிய பிரபல ரவுடி கைது

காவல்துறை துனை ஆய்வாளரின் மகனைக் கடத்திய ரவுடி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

3 கொலை வழக்குகள் உள்பட 52 வழக்குகளில் சிக்கிய ரவுடி, கண்ணன் என்ற மாயக்கண்ணன். சென்னை ஓட்டேரியில் ஏழுமலை என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு, மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு, சென்னை பட்டாபிராமில் தினேஷ் கொலை வழக்கு ஆகியவற்றில் ரவுடி மாயக்கண்ணன் குற்றவாளி ஆவார்.

சென்னையில் மட்டும் 15 காவல் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளன. மதுரை, புதுச்சேரி, திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஊர்களிலும் இவர் மீது வழக்குகள் உள்ளன.

மாயக்கண்ணன் 6 முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றுள்ளார். திருவள்ளூரில் காவல்துறை துனை ஆய்வாளரின் மகன் கடத்தல் வழக்கு, திருவண்ணாமலையில் 8 கிலோ நகை கொள்ளை அடித்த வழக்கிலும் இவர் சம்பந்தப்பட்டவர்.

சென்னை அயனாவரம் தீக்காகுளம் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த ஒரு வருடமாக வழக்குகள் எதிலும் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனிப்படை காவல்துறையினடர ரவுடி மாயக்கண்ணனை தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து மாயக்கண்ணன் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.