1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (07:48 IST)

திமுக பேரணி: ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை!

மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த பேரணியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்
 
இந்த நிலையில் இந்த பேரணிக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் இன்றைய பேரணிக்கு இரண்டு கூடுதல் ஆணையர்கள், 12 துணை ஆணையர்கள் மற்றும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக காவல் துறையிலிருந்து தகவல் வந்துள்ளது. மேலும் இரண்டு ட்ரோன்கள் மூலம் பேரணி முழுமையாக கண்காணிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நேற்று பேரணிக்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் நீதிபதி இந்த பேரணிக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். ஆனால் அதே நேரத்தில் பேரணிக்கு ஒரு சில நிபந்தனைகளையும் அவர் விடுத்துள்ளார். பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் பேரணி நடத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து பேரணியில் அத்துமீறல் இருக்கின்றதா? என்பதை கண்காணிக்க ட்ரோன்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இன்றைய பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த பேரணியால் குடியுரிமை சட்டம் வாபஸ் பெறப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்