திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 மார்ச் 2019 (19:22 IST)

திருநாவுகரசனுக்கு பெண்கள் நம்பரை சப்ளை செய்த தோழி: திடுக்கிடும் தகவல்; போலீஸ் தேடல்!

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200 பெண்களை மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர். 
 
இவ்வழக்கில் போலீஸார் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நாலவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
 
போலீஸார் நடத்திய விசாரணையில், பேஸ்புக் மூலம் மாணவிகள், இளம் பெண்களிடம் நட்பை ஏற்படுத்தி ஆனைமலை சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு தனியாக வரவழைத்து, ஆபாசமாக படம் எடுத்து, அதைக்காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். 
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுக்கு அவருடன் படித்த சேலத்தை சேர்ந்த கல்லூரி தோழி ஒருவர் பெண்களின் நம்பர் சப்லை செய்ததாக திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. 
 
மேலும், திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்தபோதும், இந்த  தோழிதான் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தாக தெரிகிறது. இதனால், திருநாவுகசரின் தோழியை பிடித்தால் இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்ற நோக்கத்தில், போலீஸார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.